Feb 5, 2026
Thisaigal NewsYouTube
NGO செயலாளர் கைது: 4.2 மில்லியன் ரிங்கிட் நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகம்
தற்போதைய செய்திகள்

NGO செயலாளர் கைது: 4.2 மில்லியன் ரிங்கிட் நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகம்

Share:

புத்ராஜெயா, பிப்ரவரி.05-

அரசு சாரா இயக்கமான NGO ஒன்றின் நிதியிலிருந்து சுமார் 4.2 மில்லியன் ரிங்கிட் தொகையைத் துஷ்பிரயோகம் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில், அந்த அமைப்பின் செயலாளர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று காலை நிறுத்தப்பட்ட அந்த நபர், எஸ்பிஆர்எம் செய்து கொண்ட விண்ணப்பித்ததைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் எஸ்ரின் ஸாகாரியா அனுமதி வழங்கினார்.

40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், நேற்று மாலை 6 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டார்.

உணவு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான இவர், கடந்த 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை இந்த மோசடியில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட NGO அமைப்பு, காஸா மனித நேய உதவிக்காகத் திரட்டிய பணத்தில் அந்த நபர் கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

Related News

இந்து ஆலயங்களுக்கு எதிரான பேரணியைத் தடுக்க இந்திய எம்பிக்கள் வலியுறுத்தல்

இந்து ஆலயங்களுக்கு எதிரான பேரணியைத் தடுக்க இந்திய எம்பிக்கள் வலியுறுத்தல்

அனைத்து மலேசியர்களுக்கும் 100 ரிங்கிட் சாரா (SARA) நிதி உதவி: பிப்ரவரி 9 முதல் வழங்கப்படும்

அனைத்து மலேசியர்களுக்கும் 100 ரிங்கிட் சாரா (SARA) நிதி உதவி: பிப்ரவரி 9 முதல் வழங்கப்படும்

பயணிகள் இனி My50-இல் சேமிப்பைத் தெரிந்து கொள்ளலாம்: பயன்பாட்டை அதிகரிக்க புதிய வசதி

பயணிகள் இனி My50-இல் சேமிப்பைத் தெரிந்து கொள்ளலாம்: பயன்பாட்டை அதிகரிக்க புதிய வசதி

ஊடகச் சுதந்திரத்திற்காக 'மலேசிய ஊடக மன்றம்' வலுப்படுத்தப்பட வேண்டும்: பிரதமர் விருப்பம்

ஊடகச் சுதந்திரத்திற்காக 'மலேசிய ஊடக மன்றம்' வலுப்படுத்தப்பட வேண்டும்: பிரதமர் விருப்பம்

பள்ளி மாணவனுக்குப் பாலியல் தொல்லை: பேருந்து ஓட்டுநருக்கு  7 நாட்கள் தடுப்புக் காவல்

பள்ளி மாணவனுக்குப் பாலியல் தொல்லை: பேருந்து ஓட்டுநருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தினமும் சிங்கப்பூர் எல்லை தாண்டும் 4 லட்சம் மலேசியர்களுக்கு புதிய பாதுகாப்பு: அமைச்சர் ரமணனின் அதிரடி அறிவிப்பு

தினமும் சிங்கப்பூர் எல்லை தாண்டும் 4 லட்சம் மலேசியர்களுக்கு புதிய பாதுகாப்பு: அமைச்சர் ரமணனின் அதிரடி அறிவிப்பு