Jul 31, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு இந்திய இளைஞர்களை போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

இரண்டு இந்திய இளைஞர்களை போலீஸ் தேடுகிறது

Share:

நீலாய், ஆகஸ்ட் 12-

கடந்த வாரம் புதன்கிழமை நெகிரி செம்பிலான், நீலாய் வர்த்தக மையத்தில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் இரண்டு இந்திய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்..

பந்தர் பாரு- சலாக் டிங்கி- யை சேர்ந்த 22 வயது S. துரைசெல்வம் என்ற ஈவா மற்றும் 22 வயது M. குணசீலன் என்ற குணா ஆகிய இரண்டு நபர்கள் தேடப்பட்டு வருவதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி இரவு 10.15 மணியளவில் இந்த கைகலப்பில் ஓர் இளைஞர் கும்பலுக்கு இடையில் நிகழ்ந்தது. இதில் ஐந்து பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சண்டையில் தலையில் கடும் காயங்களுக்கு ஆளான இளைஞர் ஒருவர், சிரம்பான், துவாங்கு ஜாபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துரைசெல்வத்தையும், குணசீலனையும் அடையாளம் காணும் பொது மக்கள் 019- 815 6812 என்ற தொலைபேசி எண்ணில்இன்ஸ்பெக்டர் முகமது அஃபாண்டி- யுடன் தொடர்புகொள்ளுமாறு கண்காணிப்பாளர் அப்துல் மாலிக்கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை