Dec 2, 2025
Thisaigal NewsYouTube
துணிக்கடையில் நம்பிக்கை மோசடி முன்னாள் குமாஸ்தா குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

துணிக்கடையில் நம்பிக்கை மோசடி முன்னாள் குமாஸ்தா குற்றச்சாட்டு

Share:

துணி கிடங்குக்கு சொந்தமான 70 ஆயிரம் வெள்ளியை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தி, நம்பிக்கை மோசடி செய்ததாக முன்னாள் பெண் குமாஸ்தா ஒருவர் ஜார்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றங்சாட்டப்பட்டார்.

ஜெனட் பிசி கோமேஸ் என்ற 38 வயதுடைய அந்த பெண் குமாஸ்தா, கடந்த 2015 ஆம் ஆண்டிற்கும் 2019 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் , ஜார்ஜ் டவுன், லெபோ பசாரில் உள்ள ஒரு துணிக் கிடங்கில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Janet டிற்கு எதிராக மொத்தம் 8 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. குற்றவாளி என்று நிரூபிக்கப்ட்டால் கூடிய பட்சம் 14 ஆண்டு சிறை, பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யயும் குற்றவியல் சட்டத்தின் கீழ் ஜெனெட் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும் தனக்கு எதிராக குற்றத்தை மறுத்து ஜனெட் விசாரணை கோரியதால் அவரை இரு நபர்கள் உத்தரவாதத்தின் பேரில் 6 ஆயிரம்வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிபதி முகமட் காலிட் அப்துல் கரிம் அனுமதி அளித்தார்.

Related News