Jun 30, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி
தற்போதைய செய்திகள்

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

Share:

தற்போதைய கடும் வெயில் காரணமாக மலாக்காவிலுள்ள மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் 10 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ள போதிலும், நிலைமை இன்னும் சீராகவே இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, டுரியான் துங்கல் அணையில் 70 சதவீதமும், ஜூஸ் அணையில் 60 சதவீதமும், அசாகான் அணையில் 90 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பொதுப்பணி மற்றும் உள்கட்டமைப்பு துறை அமைச்சர் ஹமீது மைதீன் குஞ்சு பஷீர், நீர்மட்டம் குறைந்தாலும் கவலைப்படும் அளவிற்குப் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்தார்.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, அடுத்த மாதம் மேற்கு கடலோரப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பதால், அணைகளுக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News