லங்காவிக்கு பல்வேறு நிறுவனங்களை உள்ளடக்கிய ஃபெரி சேவை , அந்தத் தீவுக்கும் பயனர்களுக்கும் கூடுதல்மதிப்பும் பயனையும் சேர்க்கும் என்கிறார் கெடா மாநில முதல்வர் சனுசி முகம்மட்.
அது மட்டுமல்லாமல், ஃபெரி சேவையில் ஆரோக்கியமான போட்டி நிலவுவதோடு தற்போதுள்ள ஃபெரி சேவை நிறுவனங்களின் நிலையை மேம்படுத்த முடியும் என்றார் அவர்.
அதிகமாக ஃபெரி சேவை இருந்தால் இன்னும் விறுவிறுப்பாகச் செயல்படுவர். ஒவ்வொரு பயணியும் சிறந்த சேவையை வழங்கும் ஃபெரி சேவையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றார் சனுசி








