புத்ராஜெயா, ஆகஸ்ட்.23-
நாடு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி 2025 ஆம் ஆண்டுக்கான தேசியத் தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடவிருக்கிறது.
தேசிய தினத்தைச் சிறக்க வைப்பதற்கு பல்வேறு ஒத்திகைகள் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இந்நிலையில் அனுமதியின்றி வானில் டிரோன் பறக்க விட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு புத்ராஜெயா போலீசார் நினைவுறுத்தினர்.
தேசிய தினத்தின் ஒத்திகையையொட்டி போர் விமானங்கள் மிகத் தாழ்வாகப் பறக்கும் நிலை உள்ளன. இந்நிலையில் இந்த உத்தரவை மீறுகின்றவர்கள், 2016 ஆம் ஆண்டு வான் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அய்டி ஷாம் முகமட் நினைவுறுத்தியுள்ளார்.








