கோலாலம்பூர், நவம்பர்.10-
தைவானைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலமான ஒரு பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாட்டின் ரேப் பாடகர் Namewee- க்கு எதிரான தடுப்புக் காவலை போலீசார் நீடித்துள்ளனர்.
42 வயதுடைய அந்த சர்ச்சைக்குரிய பாடகரை வரும் நவம்பர் 13 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு போலீசார் கூடுதல் கால அவகாசத்தைக் கோரியதாக கோலாலம்பூர் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சஸாலி அடாம் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் உள்ள பிரபல ஹோட்டலில் கொலையுண்ட கிடந்த அந்த தைவான் பெண்ணை ஆகக் கடைசியாகச் சென்று பார்த்தவர் அந்த ரேப் பாடகர் என்று கூறப்படுகிறது.








