தெலுக் இந்தான், டிசம்பர்.11-
பேரா, தெலுக் இந்தான் மருத்துவமனையில் குழந்தை காணவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவலை அந்த மருத்துவமனை இன்று மறுத்துள்ளது.
எனினும் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்களைக் கையாளுவதற்கு மருத்துவமனைப் பணியாளர்கள் எத்தகைய விழிப்புணர்வைக் கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக நடைபெற்ற செயல்முறை விளக்கக் காட்சியை சிலர் தவறாக புரிந்து இருக்கலாம் என்று அம்மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
அந்த செயல்முறை விளக்கக் காட்சி, இன்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்றதாக அது குறிப்பிட்டுள்ளது.
இதில் தாதியர்கள், காவல் படையினர், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டதாக அந்த மருத்துவமனை ஓர் அறிக்கையில் தெளிவுபடுத்தியது.








