Oct 8, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளி சந்தைக்காக சாலை மூடல் – போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்: ஹன்னா இயோ

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளி சந்தைக்காக சாலை மூடல் – போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்: ஹன்னா இயோ

கோலாலம்பூர், பிரிக்பில்ட்ஸில் தீபாவளி சந்தை நடைபெறுவதையொட்டி, ஜாலான் துன் சம்பந்தன் 1-ன் 120 மீட்டர் பகுதி இன்று முதல் மூடப்பட்டுள்ளது என்று கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.

ஜாலான் துன் சம்பந்தனை லெங்கோக் துன் சம்பந்தனுடன் இணைக்கும் இந்தச் சாலை, தீபாவளி சந்தை நடைபெறும் 30 நாட்களுக்கும் மூடப்பட்டிருக்கும். இதனால் ஜாலான் துன் சம்பந்தன் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இன்று கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் தீபாவளி சந்தை நடைபெறும் இடத்தில் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் டத்தோ ஸ்ரீ ஃபட்லுன் மாக் உஜுட்டுடன் தீபாவளி சந்தைக்கான ஏற்பாடுகளை நேரில் காண வருகை புரிந்த அமைச்சர் ஹன்னா இயோ, செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

விழாக்காலத்தில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாதது என்றாலும், கடுமையான நெரிசலைத் தவிர்ப்பதே நோக்கம் என்றும் ஹன்னா இயோ தெரிவித்தார். வாகனமோட்டிகள் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்றும், மாநகர் மன்றமான டிபிகேஎல் அமலாக்க அதிகாரிகள் தினசரி போக்குவரத்தை கண்காணிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, கோலாலம்பூர் மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ ஸ்ரீ ஃபட்லுன் மாக் உஜுட் கூறுகையில், இந்த ஆண்டு தீபாவளி சந்தை முதல் முறையாக ஒரே இடத்தில் மையப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 151 விற்பனைத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன; அவற்றில் 131 தளங்கள் பிரிக்பில்ட்ஸிலும் 20 தளங்கள் மஸ்ஜிட் இந்தியா Masjid பகுதியிலும் உள்ளன என்றார்.

தீபாவளி சந்தைக்காக டிபிகேஎல் சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் செலவிடுவதுடன், ஒவ்வொரு விற்பனைத் தளத்திற்கும் வாடகை 400 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு, பானங்கள், பல்வேறு பொருட்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளும் இடம்பெறும் என்று டத்தோ பண்டார் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →