கோல திரங்கானு, ஜூலை.31-
திரெங்கானு கடற்பகுதியில் பாய்மரக் கப்பல் ஒன்று கவிழ்ந்த சம்பவத்தில் இரண்டு துருக்கி நாட்டுச் சுற்றுப் பயணிகள் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை கோல திரங்கானுவிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் உள்ள பூலாவ் யூ என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.
டெய்சி என்ற அந்த பாய்மரக் கப்பல் தியோமான் தீவிலிருந்து தாய்லாந்து, பட்டாணியை நோக்கிச் சென்று கொண்டு இருந்த போது கடலில் கவிழ்ந்ததாக அஞ்சப்படுகிறது.
புயலில் அந்த பாய்மரப் படகு சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.








