May 5, 2026
Thisaigal NewsYouTube
271-வது ஆட்சியாளர்கள் மாநாட்டில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பங்கேற்பு
தற்போதைய செய்திகள்

271-வது ஆட்சியாளர்கள் மாநாட்டில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பங்கேற்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.12-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இஸ்தானா நெகாராவில் இன்று நடைபெற்ற 271-வது ஆட்சியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இன்று வியாழக்கிழமை இரண்டாம் நாளாகத் தொடர்ந்த இந்த மாநாட்டிற்குத் திரெங்கானு சுல்தான், சுல்தான் மிஸான் ஸைனால் அபிடின் தலைமை தாங்கினார்.

சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா, பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா, கெடா சுல்தான், Al-Aminul Karim Sultan Sallehuddin Sultan Badlishah, பெர்லிஸ் ராஜா துவாங்கு சையிட் சிராஜுடின் ஜமாலுலாயில், நெகிரி செம்பிலான் சமஸ்தானபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்ட இதர ஆட்சியாளர்களில் அடங்குவர்.

Related News