கோலாலம்பூர், நவம்பர்.14-
கோலாலம்பூர் மேயரான டத்தோ ஶ்ரீ டாக்டர் மைமூனா முகமட் ஷாரிஃப் தனது பதவிக் காலம் நிறைவடையும் முன்பே, மேயர் பதவியிலிருந்து விலகி பெட்ரோனாஸ் நிறுவனத்தில் புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலோடு, 9 மாதங்களுக்கு முன்னதாகவே அவர் பதவி விலகுவதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷாம்சுல் அஸ்ரி அபு பக்கார் தெரிவித்துள்ளார்.
பெட்ரோனாஸ் நிறுவனத்தில் உயர்மட்டப் பதவியில் புதிய பொறுப்பேற்கவுள்ள மைமூனா, அங்கு முதலீட்டு ஆலோசகராகச் செயல்பட்டு, தலைநகரில் புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் தலைமை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.








