Jun 30, 2026
Thisaigal NewsYouTube
 பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்
தற்போதைய செய்திகள்

பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்

Share:

இன்று காலையில் சரவாக், ஸ்ரீ அமான் - செரியான் இடையிலான பான் போர்னியோ நெடுஞ்சாலையில், கம்போங் செலிபோங் ஜிங்காவ் அருகே இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான புரோட்டோன் X70 காரில் பயணம் செய்த 70 வயது முதியவர் Lau Sie Tung, மற்றும் 22 வயதுடைய கிரேஸ் லாவ் சி ஆய் / லாவ் யோக் லே ஆகிய இரு இளம்பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதே காரில் இருந்த இரண்டு சிறுவர்களுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கியிருந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

Related News