கோலாலம்பூர், அக்டோபர்.07-
இஸ்தானா நெகாராவில் 270 ஆவது ஆட்சியாளர் மாநாட்டின் முந்தையக் கூட்டம், இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கலந்து கொண்டார்.
270 ஆவது ஆட்சியாளர்கள் மாநாடு நாளை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இரண்டு தினங்களுக்கு நடைபெறவிருக்கும் இம்மாநாட்டிற்கு பெர்லிஸ் ராஜா, துவாங்கு சையிட் சிராஜுடின் ஜமாலுலாயில் தமையேற்கவிருக்கிறார் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் இம்மாதம் மலேசியா ஏற்று நடத்தவிருக்கும் 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் ஆகக் கடைசியான நிலவரங்கள் குறித்து ஆட்சியாளர்களுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்தார்.








