May 21, 2026
Thisaigal NewsYouTube
மூன்று பதின்ம வயது இளைஞர்கள் கைது
தற்போதைய செய்திகள்

மூன்று பதின்ம வயது இளைஞர்கள் கைது

Share:

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ஜோகூர்பாருவில் 7 வயது சிறுவனை கடத்தும் முயற்சியில் உடந்தையாக இருந்ததாக நம்பப்படும் மூன்று பதின்ம வயது இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

15,17,18 வயதுடைய அந்த மூன்று பதின்ம வயது இளைஞர்களும் நேற்று மாலை 5.40 மணியளவில் பொந்தியானில் கைது செய்யப்பட்டதாக ஜோகூர்பாரு, செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ராவுப் செலாமாட் தெரிவித்தார்.

அந்த மூன்று இளைஞர்களும் நான்கு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை போலீசார் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் வசிப்பிட அந்தஸ்தைக் கொண்ட சீன நாட்டுப் பிரஜை ஒருவர் , தனது 7 வயது மகனுடன் சென்று கொண்டிருந்த போது, அவர்களை மடக்கிய கும்பல் ஒன்று அந்த சிறுவனை கடத்த மேற்கொண்ட முயற்சி தோல்விக் கண்டது.

தனது மகனை காப்பாற்ற சிறுவனின் தந்தை அந்த கும்பலுடன் கடுமையாக போராடியதால் அவர் படுகாயத்திற்கு ஆளானதாக கடந்த புதன்கிழமை ஏசிபி ரவூப் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

Related News

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது