பிஎல்கேஎன் எனப்படும் தேசிய சேவைக்கான பயிற்சித் திட்டத்தை அரசாங்கம் மறுபடியும் நடைமுறைப்படுத்துமானால் அந்த தேசிய சேவையில் பதின்ம வயதுடையவர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவர் என்று தாற்காப்பு அமைச்சு உறுதி அளித்துள்ளது.
அதேவேளையில் தேர்வு செய்யப்படும் பங்கேற்பாளர்கள், அந்த பயிற்சியை செய்ய முடியாத நிலையில் இருப்பார்களோயானால் பயிற்சியை ஒத்திவைப்பதற்கு அவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்று தற்காப்பு அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது.
எனினும் தேசிய பயிற்சியில் பதின்ம வயதுடைய இளைஞர்கள் முதல் 35 வயதுடையவர்கள் வரையில் பங்கேற்பதற்கு பிஎல்கேஎன் சட்டம் அனுமதிப்பதாக தற்காப்பு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.








