ஜோகூர் பாரு, டிசம்பர்.22-
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஐக்கிய அரபு சிற்றரசுக்கு இன்று தொடங்கி டிசம்பர் 24 ஆம் தேதி வரை அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டுள்ளார்.
ஐக்கிய அரபு சிற்றரசின் அதிபர் Sheikh Mohamed bin Zayed Al Nahyan விடுத்துள்ள அழைப்பை ஏற்று மாமன்னர் சுல்தான் இப்ராாஹிம் அந்நாடட்ற்கு தமது முதலாவது அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டுள்ளார்.
மாமன்னர், ஜோகூர், செனாய் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து அரச விமானத்தில் பயணத்தைத் தொடங்கியுள்ளார் என்று தமது முகநூலில் மாமன்னர் குறிப்பிட்டுள்ளார்.
மாமன்னரை ஜோகூர் அரசு செயலாளர் டத்தோ அஸ்மான் அப்துல் ரஹ்மான் உட்பட முக்கியப் பிரமுகர்கள் வழியனுப்பி வைத்தனர்.








