கோத்தா பாரு, ஆகஸ்ட்.30-
பேராக், கெரிக்கிற்கும், கிளந்தான் ஜெலிக்கும் இடையிலான கிழக்கு–மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் எம்பிவி வாகனமும், ஒரு லோரியும் மோதிக் கொண்ட விபத்தில் 40 வயது மதிக்கத்தக்க மாது ஒருவரும், 9 மாதக் கைக்குழந்தையும் உயிரிழந்தனர். மேலும் ஐவர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3. 20 மணியளவில் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் 7 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று ஜெலி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் அஸ்ஹார் எல்மி முஸ்தோஃபார் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து பிற்பல் 3.23 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் துரித வேகத்தில் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு, மீட்புப் பணிகள் யாவும் மாலை 4.17 மணியளவில் நிறைவடைந்தன என்று அவர் குறிப்பிட்டார்.








