சிகாமட், ஆகஸ்ட்.05-
கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, இரண்டு மின் கம்பங்களில் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஜாலான் செகமாட்-குவாந்தான் சாலையின் 13 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது. இதில் 51 வயது முகமட் இஸுடின் ஹர்மைனி மற்றும் அவரின் 36 வயது மனைவி நூர் ஷாமிமி ரொஸ்லி ஆகியோர் உயிரிழந்தனர்.
அத்தம்பதியர் பயணம் செய்த ஃபோர்ட் முஸ்தாங், குவாந்தானிலிருந்து சிகாமட்டை நோக்கிச் சென்று கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக சிகாமட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ஸம்ரி மாரின்சா தெரிவித்தார்.








