மலாக்கா, அக்டோபர்.24-
மலாக்காவிற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் பாரம்பரிய Nyonya kebaya உடை அணிந்திருந்தால் அவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரவுஃப் ஜுசோ அறிவித்துள்ளார்.
மலாக்கா உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தளங்களில் அவர்களுக்கு இலவச நுழைவுக்கான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலாக்காவின் கலாச்சார நிலப்பரப்பின் ஒரு அடையாளமாக விளங்கும் பெரனாக்கான் பாரம்பரியத்தைப் போற்றவும், பாதுகாக்கவும் இம்முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மலாக்கா ஆற்றில் இலவசப் படகுச் சேவை உள்ளிட்ட இச்சலுகைகள் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








