சிக்கன கட்டண விமான நிறுவனமான மை ஏர்லைன், தனது விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்ற போதிலும் அது தனது வான் போக்குவரத்து வர்த்தகத்தை முற்றாக நிறுத்திவிடாது என்று அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ செரி அசாருடின் அப்துல் ரஹ்மான் உறுதி அளித்துள்ளார்.
நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மை ஏர்லைனை காப்பாற்றுவதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிறுவனத்திற்கு முதலீடு செய்வதற்கு வாக்குறுதி அளித்தவர்கள் திடீரென்று பின்வாங்கியதால்மை ஏர்லைலினால் தொடர்ந்து சேவையை நடத்த இயலவில்லை. எனினும் ஆற்றல் வாய்ந்த முதலீட்டாளர்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருதாகவும் அந்த முதலீட்டாளர்களின் பெயர்களை தற்போது அறிவிக்க இயலாது என்றும் அசாருடின் அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.








