லஞ்ச ஊழல் தொடர்பில், மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரின் சிறப்பு அதிகாரி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்நியத் தொழிலாளர்களைக் தருவிப்பதற்கு நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டது தொடர்பில், அமைச்சர் சிவக்குமாரின் முதிர் நிலை அதிகாரி என்று நம்பப்படும் அந்தச் சிறப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலையில், புத்ராஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சரின் அலுவலகத்தில் எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், அந்தச் சிறப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்காக நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டு, மனிதவள அமைச்சின் அங்கீகாரம் பெறப்பட்டதில், சம்பந்தப்பட்ட சிறப்பு அதிகாரிக்குச் சுயநலன் சார்ந்த அம்சங்கள் இருப்பதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே அமைச்சர் சிவக்குமாரின் சிறப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டதை எஸ்.பி.ஆர்.எம். மின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு


