May 26, 2026
Thisaigal NewsYouTube
Yoges Salon Academy திறன் பயிற்சி அங்கீகார மையத்தின் பட்டமளிப்பு விழா
தற்போதைய செய்திகள்

Yoges Salon Academy திறன் பயிற்சி அங்கீகார மையத்தின் பட்டமளிப்பு விழா

Share:

டிச.6-

Yoges Salon Academy திறன் பயிற்சி அங்கீகார மையத்தின் 27 பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா, கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி புதன்கிழமை, பாங்கி, மலேசிய தேசிய பல்கலைக்கழகமான UKM- மில் Dewan Canselor Tun Abdul Razak மண்டபத்தில் அர்த்தம் பொதித்த நிலையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மலேசிய தேசிய இரட்டைப் பயிற்சி திட்டத்தை வழிநடத்தும் SLDN சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவிற்கு, துணைப்பிரதமரின் அரசியல் செயலாளர் Datuk Megat Zulkarnian Omardin தலைமையேற்று, பல்வேறு துறைகளில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சாற்றிதழை வழங்கி சிறப்பு செய்தார்.

Yoges Salon Academy- சிகை அலங்கரிப்பு மற்றும் முக ஒப்பனை, சலூன் சேவைத் தொழில் துறையில் திறன் பெற்ற ஆள்பலத்தை உருவாக்குவதில் தொடர்ந்து வெற்றி நடைபோட்டு வரும் ஒரு பயிற்சி மையமாகும்.

நிகழ்விற்கு தலைமையேற்ற Datuk Megat Zulkarnian, தமது உரையில், உயர்தரமான தொழில் திறன் பயிற்சி கல்வித் தளத்தை வழங்குவதில் Yoges Salon Academy-யின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கெண்டார். அதேவேளையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் திறன் பயிற்சிகளின் முக்கியத்துவத்தையும் அவர் தமது உரையில் வலியுறுத்தினார்.

பட்டதாரிகளின் இன்றைய வெற்றியானது, அவர்களின் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல. மாறாக, திறன் பெற்ற ஆள்பலத்தை உருவாக்குதில் நாட்டின் வெற்றியையும் இது பிரதிபலிக்கிறது. இன்று பட்டம் பெற்றவர்கள் அனைவரும் தொழில்துறையில் முற்போக்கான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நாட்டின் மதிப்புமிகுந்த சொத்துக்களாகும் என்று Datuk Megat Zulkarnian தமது உரையில் வர்ணித்தார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் Yoges Salon Academy திறன் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 8 பயிற்றுநர்கள் உட்பட மொத்தம் 27 பட்டதாரிகள், சிகை அலங்கரிப்பு, முக ஒப்பனை மற்றும் சலூன் சேவை ஆகியத்துறைகளுக்கான டிப்ளோமா சான்றிதழைப் பெற்றனர்.

Yoges Salon Academy திறன் பயிற்சி மையத்தின் தோற்றுநரும், நிர்வாக இயக்குநருமான திருமதி யோகேஸ்வரி ராஜேந்திரன், தமது உரையில் தங்கள் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த தமது மையத்தைச் சேர்ந்த 27 பட்டதாரிகள், அதற்கான அங்கீகார சான்றிதழ் பெறுவது குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

தமது மையம் சிகை அலங்கரிப்பு, முக ஒப்பனை மற்றும் சலூன் சேவையில் பட்டம் பெற்றவர்களை, இத்துடன் கைவிட்டு விடுவதில்லை. மாறாக, அவர்களின் எதிர்காலத்தை செம்மையாக்குவதற்கான தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதாக யோகேஸ்வரி ராஜேந்திரன் தமது உரையில் குறிப்பிட்டார்.

27 பட்டதாரிகள் இன்று பெற்றுள்ள சான்றிதழ், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு கிடைத்த ஓர் ஆங்கீகாரமாகும். சவால்மிகுந்த தொழில்துறையை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றவர்களை, தொழில் திறன் பெற்றவர்களாக உருவாக்குவதில் தொடர்ந்து Yoges Salon Academy, முழு கடப்பாட்டை கொண்டு இருக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.

மேலும் இந்த பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகளை செய்த அனைத்து தரப்பினருக்கும் யோகேஸ்வரி ராஜேந்திரன் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு