Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கல்லூரி மாணவி கொலை: பாலியல் குற்றத்தன்மைக்கு வழி வகுக்கவில்லை
தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவி கொலை: பாலியல் குற்றத்தன்மைக்கு வழி வகுக்கவில்லை

Share:

சுபாங் ஜெயா, ஆகஸ்ட்.22-

கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 2/1 இல் கல்லூரி மாணவி ஒருவர் தாம் தங்கியிருந்த வீட்டின் பிரதான அறையில் சிலிங் மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சம்பவத்தில் அவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதற்கான குற்றத்தன்மை அறிகுறிகள் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

அந்தக் கல்லூரி மாணவியின் குடும்பத்தினர், அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் அவரின் தோழிகள் ஆகியோர் உட்பட சுமார் 30 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

இன்னும் 5 பேரிடம் விசாரணை செய்யப்பட வேண்டியிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணை முடிவடைவதற்குத் தங்களுக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால், அந்த இளம் பெண் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகவில்லை என்று சுபாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஏசிபி வான் அஸ்லான் மேற்கண்டவாறு கூறினார்.

அந்த மாணவி தங்கிருந்த வீட்டிற்கு அருகில் பொறுத்தப்பட்டுள்ள ரகசிய கேமராக்களின் பதிவைப் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். எனினும் இச்சம்பவம் ஒரு கொலை வழக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
20 வயதுடைய அந்த மாணவியின் மரணத்திற்கு விரைவில் விடை காணப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்