May 21, 2026
Thisaigal NewsYouTube
விபச்சார மையங்கள் திறக்கப்பட வேண்டுமா?
தற்போதைய செய்திகள்

விபச்சார மையங்கள் திறக்கப்பட வேண்டுமா?

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.9
மலேசியாவில் குறிப்பாக, அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்காக விபச்சார மையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று பிரபல நடிகர் ரொஹாம் நோர் Nor முன்வைத்துள்ள பரிந்துரைக்கு பினாங்கு முஃப்தி ( Mufti ) வான் சலிம் வான் முஹமாட் அதிர்ச்சி தெரிவித்ததுடன் அந்த யோசனைக்கு தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுபோன்ற யோசனைகள் , நாட்டில் ஒழுங்கீன நடவடிக்கைகளை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் என்று அவர் எச்சரித்தார். எந்தவொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் இது போன்ற இழிவான செயல்களை ஊக்கப்படுத்த மாட்டர்கள் என்று வான் சலிம் நினைவுறுத்தினார்.

மலேசியாவில் வேலை செய்து வரும் அந்நியத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளையில் முஸ்லீம் அல்லாதவர்களும் இது போன்ற நடவடிக்கையை ஊக்குவிக்க மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் கற்பழிப்பு போன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழ்வதை குறைப்பதற்கு விபச்சார மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று முன்னணி நடிகர் ரொஷாம் நோர் முன்வைத்துள்ள பரிந்துரை தொடர்பில் கருத்துரைக்கையில் வான் சலிம் மேற்கண்டவாறு கூறினார்.

Related News