நேற்று பாலிங், குபாங் வட்டாரத்தில் கம்போங் மென்குவாங் தெங்ஙாவில் உள்ள கேணி ஒன்றில் 80 வயது மூதாட்டி இறந்து கிடந்தார்.
மாற்றுத் திறனாளியான உமின கல்சோம் ஜாசின் கேணியில் இறந்து கிடந்ததை மாலை மணி 4.30க்கு அம்மூதாட்டியின் குடும்ப உறுப்பினர் கண்டறிந்து குபாங் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக Baling மாவட்டக் காவல் துறையின் தலைவர் சுபெரிதென்டன் ஷம்சுடின் மாமாட், தெரிவித்தார்.
இச்சம்னவத்திற்கு முன்னர், நண்பகல் 12.30 மணி அளவில் விட்டிற்குப் பின்னார் அம்மூதாடி புல் வெட்டிக் கொண்டு இருந்ததை தாம் பார்த்ததாக காவல் துறைக்குத் தகவல் தெரிவித்த குடும்ப உறுப்பினர் கூறினார். வெகு நேரம் ஆகியும் அம்மூதாட்டி திரும்பி வராததால் மூதாட்டியைத் தேடி தாம் சென்றதாக குடும்ப உறுப்பினர் குறிப்பிட்டார். இறுதியாக, வீட்டின் பின்னால் உள்ள கேணியில் அம்மூதாட்டி விழுந்து கிடந்தார் எனவும் அவர் சொன்னார்.
மூதாட்டியின் சடலம் உடற்கூறாய்வுக்காக அலோர் செதார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது என ஷம்சுடின் கூறினார்.








