கோலாலம்பூர், ஜூலை.26-
இன்று நடைபெற்ற துருன் அன்வார் பேரணியில் கிட்டத்தட்ட 18 ஆயிரம் பேர் திரண்டுள்ளனர் என்று கோலாலம்பூர் இடைக்காலப் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் உசோஃப் ஜான் தெரிவித்துள்ளார்.
எனினும் பேரணியை ஏற்பாடு செய்த பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரிவின் வாதத்தின்படி 2 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டுள்ளர் என்று குறிப்பிட்டுள்ளது.
பேரணி முழுவதும் விரும்பத்தகாத எந்தவொரு சம்பவமும் நிகழவில்லை. டத்தாரான் மெர்டெக்காவில் அமைக்கப்பட்ட மேடையை மாநகர் அமலாக்க அதிகாரிகள் அகற்றிய சம்பவத்தைத் தவிர பேரணி மிக அமைதியாக நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
மூவாயிரத்திற்கும் அதிகமான போலீஸ்காரர்கள் கடமையில் ஈடுபட்டுள்ள வேளையில் ஒத்துழைப்பு நல்கிய பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு டத்தோ முகமட் உசோஃப் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.








