Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சட்டம் எங்களுக்கு சாதகமாக உள்ளது
தற்போதைய செய்திகள்

சட்டம் எங்களுக்கு சாதகமாக உள்ளது

Share:

பினாங்கு மாநிலம், கெடாவிற்கு சொந்தமானது என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு, பொது அமைதிக்கு குந்தகத்தை ஏற்படுத்தி வரும் கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூருக்கு சாதகமாக வராலாறு இருக்குமாயின், சட்டம் தங்களுக்குச் சாதகமாக இருப்பதாக பினாங்கு மாநில முதல்வர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் உள்ள மாநிலங்களில், பினாங்கு மாநிலமும் ஒன்றாகும் என்பது குறித்து மலேசிய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இவ்விரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை விவகாரம் குறித்து 1985 ஆம் ஆண்டு பினாங்கு-கெடா எல்லை திருத்தச் சட்டத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சௌ கோன் இயோவ் தெரிவித்தார்.

Related News