பத்து காஜா, ஜூலை.16-
பேரா, பத்து காஜாவில் தனது சொந்த மகளைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாகப் பணி ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ வீரர், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
45 வயதுடைய அந்த முன்னாள் வீரர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜே. ஜீன் ஷர்மிளா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரானக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பத்து காஜாவில் உள்ள தனது வீட்டில் 12 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், கூடியபட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் சிறார் பாலியல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








