Apr 4, 2026
Thisaigal NewsYouTube
அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

Share:

அம்னோ கட்சியில் மீண்டும் இணைய அதன் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீட்டுக் கடிதங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ரூமா பாங்சா என்ற முயற்சியின் மூலம் இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அவற்றில், முன்னாள் இளைஞர் பிரிவு தலைவர் மற்றும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன், முன்னாள் செம்போல் தொகுதித் தலைவர் முகமது சலீம் ஷெரீப், மற்றும் முன்னாள் தெப்ராவ் தொகுதித் தலைவர் மௌலிசான் புஜாங் உள்ளிட்டோரும் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், முன்னாள் தகவல் பிரிவு தலைவர் ஷாரில் சுஃபியான் ஹம்தான், முன்னாள் சிலாங்கூர் மாநிலத் தலைவர் நோ ஒமார், மற்றும் மூத்த அரசியல் தலைவர் ராயிஸ் யாத்திம் போன்ற முக்கிய நபர்களையும் மீண்டும் கட்சியில் இணைக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அனைத்து விண்ணப்பங்களும் வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளன.

இம்முயற்சிக்கு இதுவரை நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“ரூமா பாங்சா” குறித்து தெளிவில்லாதவர்களுக்கு தொடர்ந்து விளக்கங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், முன்னாள் தலைவர்களை மீண்டும் வரவேற்கும் UMNO-வின் திறந்த மனப்பான்மை, கட்சியை மீண்டும் ஒன்றிணைக்கும் உறுதிப்பாட்டை காட்டுகிறது என்றும், இது கொலாபரேசி அகுங் முயற்சியையும் வலுப்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News