May 4, 2026
Thisaigal NewsYouTube
சிகாமாட்டில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் வாய்க்காலில் கண்டெடுப்பு
தற்போதைய செய்திகள்

சிகாமாட்டில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் வாய்க்காலில் கண்டெடுப்பு

Share:

சிகாமாட், பிப்ரவரி.20-

ஜோகூர், சிகாமாட், கம்போங் தெங்கா போக்குவரத்து சமிக்ஞை சந்திப்பிற்கு அருகிலுள்ள சிறிய வாய்க்காலில், அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது.

சிகாமாட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் Mohd Jumazanzahir Chek Ismail கூறுகையில், அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் காலை 11.40 மணியளவில் அந்த உடலைக் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சுமார் 60 வயதுடைய மூதாட்டி என நம்பப்படுகிறது.

அவரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவரது அடையாளம் இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை. முதற்கட்ட சோதனையில் உடலில் காயங்கள் அல்லது குற்றச் செயல்களுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. சிகாமாட் மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தப் பெண் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

Related News