கோலாலம்பூர், ஆகஸ்ட்.13-
பண்டான் எம்.பி.யான ரஃபிஸி ரம்லி மகன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளும்படி அரச மலேசிய போலீஸ் படை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தைத் தாங்கள் கடுமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட சைஃபுடின், இந்தத் தாக்குதலை நடத்திய நபர்களை அடையாளம் கண்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இது குறித்து தாம் நேரடியாக தொடர்பு கொண்டு ரஃபிஸியிடம் கேட்டறிந்ததாக சைஃபுடின் விவரித்தார்.








