Oct 18, 2026
Thisaigal NewsYouTube

அலங்கார வடிவமைப்பாளர் கொலை, ஆடவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அலங்கார வடிவமைப்பாளர் கொலை, ஆடவர் மீது குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 02-

அலங்கார வடிவமைப்பாளர் ஒருவரை 20 முறை கத்தியால் குத்திக்கொலை செய்ததாக நபர் ஒருவர், பெட்டாலிங் ஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

50 வயது Lim வா சியோங் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் ஷஹ்ரி அனுவார் அஹ்மத் முஸ்தபா முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இக்கொலை வழக்கு, ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அந்த நபரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நபர் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி, பந்தர் ஸ்ரீ தமன்சாரா, பெர்சியாரன் மெரண்டி-யில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புப்பகுதியில் 36 வயதுடைய அலங்கார வடிவமைப்பாளர் ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தக்கொன்றதாக ஒரு வேலையற்ற நபரான லிம் வா சியோங் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அலங்கார வடிவமைப்பாளர் கொலை, ஆடவர் மீது குற்றச்சாட்டு | Thisaigal News