மலேசியாவிற்கு வருகின்ற சீன நாட்டு சுற்றுப்பயணிகளுக்கு விசா விலளிப்பு வழங்கப்படலாம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.
சீன நாட்டு சுற்றுப்பயணிகளுக்கு விசா விலக்களிப்பு வழங்கப்படுவது தொடர்பில் ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு உள்துறை அமைச்சுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்துறை அமைச்சினால் வரையப்படும் அந்த ஆய்வறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படவதாக தியோங் கிங் சிங் குறிப்பிட்டார்.








