Dec 24, 2025
Thisaigal NewsYouTube
கொலை செய்யப்பட்ட மாது சூரி நருடின் என அடையாளம் கூறப்பட்டது
தற்போதைய செய்திகள்

கொலை செய்யப்பட்ட மாது சூரி நருடின் என அடையாளம் கூறப்பட்டது

Share:

சிரம்பான், டிசம்பர்.24-

கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி நெகிரி செம்பிலான் ரெம்பாவ், பெடாஸ், கம்போங் பத்து 4 இல் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் மாது ஒருவர் பையினுள் கட்டப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த பெண் சூரி நருடின் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.

தேசிய பதிவு இலாகாவின் உதவியுடன் அந்த மாதுவின் கைரேகை பதிவு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட போது, இறந்தவர் ஏற்கனவே சந்தேகப்பட்டதைப் போல அதே மாதுதான் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி காணாமல் போன அந்த மாது குறித்து அம்பாங் ஜெயா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கொலை தொடர்பில் போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் முக்கியச் சந்தேகப் பேர்வழி என்று டத்தோ அல்ஸாஃப்னி தெரிவித்தார்.

Related News