Jun 30, 2026
Thisaigal NewsYouTube
சிறுமி பாலியல் வன்கொடுமை: தலைமை சமையல்காரர் :குற்றத்தை ஒப்பினார்
தற்போதைய செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை: தலைமை சமையல்காரர் :குற்றத்தை ஒப்பினார்

Share:

தனது காதலியின் 16 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டை 20 வயதுடைய தலைமை சமையல்காரர் ஒருவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

சுரிதா புதின் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த சமையல்காரர், கடந்த பிப்ரவரி 26 முதல் 28-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், நெகிரி செம்பிலான், ரெம்பாவ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்ற்ததில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த சமையல்காரர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இவ்வழக்கு வரும் ஜுன் 15 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட வேளையில் அந்த சமையல்காரரை 10 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News