Jul 31, 2026
Thisaigal NewsYouTube
நான்கு மணி நேரத்திற்கு முன்பு வந்தடைவீர்
தற்போதைய செய்திகள்

நான்கு மணி நேரத்திற்கு முன்பு வந்தடைவீர்

Share:

பள்ளி விடுமுறை , கிறிஸ்துமஸ் பண்டிகை, , புத்தாண்டு என நீண்ட விடுமுறைகள் வரிசை பிடித்து நிற்கும் நிலையில், சிப்பாங், கோலாலம்பூர் விமான நிலையத்தை பயன்படுத்துகின்ற பயணிகள், தங்களின் விமானப் பயணத்திற்கு குறைந்த பட்சம் 4 மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தை வந்தடைந்து விடுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

குறித்த நேரத்தில் பயணிகளின் புறப்பாட்டை உறுதி செய்யவும், குடிநுழைவு மற்றும் சுங்கத்துறையில் நிலவும் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் முன்கூட்டியே விமான நிலையத்தை வந்தடைவது எல்லா நிலைகளிலும் பாதுகாப்பாகும் என்று KLIA வை நிர்வகித்து வரும் Malaysia Airport Holdings Berhad இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News