ஈப்போ, ஆகஸ்ட்.07-
இந்திய மாது ஒருவர், உடலில் பெட்ரோல் எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து மரணமுற்ற சம்பவத்தில் குற்றத்தன்மைக்கான அம்சங்கள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 11.20 மணியளவில் பேரா, செமோர், கிளேபாங்கில் உள்ள ஏயோன் பேரங்காடி முன்புறம் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க குணசித்ரா ஜெயகுமார் என்பவர் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டுள்ளது. இவர் ஈப்போ, தாமான் தாசேக் மேவா, பிஆர்எஸ்என் தாவாஸ் பாரு 8 ட்டைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
கோலாலம்பூரில் இருந்த அந்த மாது, ஈப்போவிற்கு திரும்பியது ஈப்போவில் உள்ள அவரின் குடும்பத்திற்குத் தெரியாது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஏசிபி அபாங் ஸைனால் தெரிவித்தார்.
உடலில் 80 விழுக்காடு தீக்காயங்களுக்கு ஆளான அந்த மாது சம்பவ இடத்திலேயே மாண்டார். அவரின் குடும்பத்தினரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்படும் என்று ஏசிபி அபாங் ஸைனால் குறிப்பிட்டார்.








