பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்த பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இடம் மாறி அமர கோரி இருப்பதாக மக்களவைத் தலைவர் ஜொஹாரி அப்துல் கூறினார்.
அவ்விவகாரத்தைக் குறிப்பிட்ட விண்ணப்பக் கடிதத்தை இன்று தமக்கு வழங்கப்பட்டதாகவும்ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் உட்படுத்தப்படாது எனவும், தாங்கள் இருக்கின்ற கட்சியில் இருந்து விலகாமலும் வேறு கட்சிக்கு மாறாமலும் தங்களின் ஆதரவரை மட்டும் பிரதமருக்குத் தெரிவிததிருப்பதாகவும் ஜொஹாரி அப்துல் மேலும் சொன்னார்.








