Oct 18, 2026
Thisaigal NewsYouTube

அரசு துறைகளில் இம்மாதம் முதல் சீர்திருத்தங்கள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அரசு துறைகளில் இம்மாதம் முதல் சீர்திருத்தங்கள்

புத்ராஜெயா,செப்டம்பர் 02-

அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் இந்த மாதம் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராதஹிம் தெரிவித்துள்ளார்.
பொதுச் சேவையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான உத்தியை உருவாக்குவதற்காக, அரசாங்க தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மற்றும் பொது சேவைத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ வான் அகமட் தஹ்லான் அப்துல் அஜீஸ் ஆகியோரை விரைவில் சந்திக்க உள்ளதாக அவர் கூறினார்.

அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு தொடர்பான சீர்திருத்தங்கள், ஒன்றுடன் ஒன்று பணியிடங்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.

மன நிறைவு அளிக்காத நிலையே நிலவுகிறது. எனவே உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற பொதுச் சேவை துறையின் மாதாந்திர பேரணியில் உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →