Jun 6, 2026
Thisaigal NewsYouTube
புடி95 மானியத்தைக் கட்டுப்படுத்த வேண்டாம்: சிறு தொழில்களுக்கு வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும் – லிம் குவான் எங் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

புடி95 மானியத்தைக் கட்டுப்படுத்த வேண்டாம்: சிறு தொழில்களுக்கு வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும் – லிம் குவான் எங் வலியுறுத்தல்

Share:

மலேசியாவின் தற்போதைய ஆர்.ஓ.என்95 பெட்ரோலுக்கான புடி95 எரிபொருள் மானியம் திட்டத்தை, அனைத்து மலேசியர்களும் பயன்படும் வகையில் தொடர்ந்து செயல்படுத்துவதோடு, வங்கிகள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நேரடியாக அதிக ஆதரவு வழங்க வேண்டும் என்றும் ஜசெக கட்சியின் பாகன் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் மானியங்களிலிருந்து T20 வருமான பிரிவினரை விலக்குவதற்குப் பதிலாக, வங்கித் துறையை இலக்காகக் கொள்வதன் மூலம், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் "இரட்டை நிலைப்பாடு கொண்டவர் என்ற குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க முடியும்" என்றும் Lim குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு வழங்கப்படும் புடி95 மானியத்தை, தேவையுடையவர்களுக்கு மட்டுமே வழங்கும் வகையில் அதனைக் கட்டுப்படுத்துவது குறித்த அன்வரின் பரிசீலனைக்கு, லிம் மேற்கண்ட பரிந்துரையை வெளியிட்டுள்ளார்.

மேலும், மானிய திட்டத்தைக் கட்டுப்படுத்தும் முடிவானது, “குறுகிய பார்வையுடையதாகவும், பொதுமக்களின் நம்பிக்கையை குறைக்கும் வகையிலும் அமையலாம்” என்றும் லிம் எச்சரித்துள்ளார்.

அதேவேளையில், நிதி சீர்திருத்தங்களை நியாயமான கொள்கையாகக் காண்பிக்காமல், தண்டனை போன்றதாக மக்கள் உணர்ந்தால் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்கையானது, நகர்ப்புறங்களில் வாழும் அதிக வருமான பெறும் T20 பிரிவினரின் நிதி அழுத்தங்களை மிக எளிமையாக மதிப்பிடுகிறது என்றும், மாதம் 11,820 ரிங்கிட்டுக்கு மேல் சம்பாதிக்கும் குடும்பங்கள் அனைத்தும், நிதி ரீதியாக வசதியாக இருக்கின்றனர் என்று கருதுவது தவறு என்றும் லிம் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைச் செலவுகளின் உயர்வு, வீட்டு கடன் மற்றும் குழந்தை பராமரிப்பு செலவுகள் போன்ற காரணங்களால் பல T20 குடும்பங்களும் நிதி அழுத்தத்தில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே, புடி95 எரிபொருள் மானியத் திட்டம் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும், அது அனைத்து மலேசியர்களுக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் லிம் வலியுறுத்தியுள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்