Oct 13, 2026
Thisaigal NewsYouTube

புதிய ஆதாரங்களைச் சமர்ப்பதில் போல் யோங் தோல்வி

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஈப்போ, மார்ச்.07-

தனது வீட்டின் பணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்டு, சிறைத் தண்டனைக்கு ஆளாகியுள்ள பேரா, துரோனோ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் போல் யோங் சூ கியோங், தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக தன்னிடம் கூடுதல் ஆதாரம் இருப்பதாக கூறிய நிலையில், அந்த ஆதாரத்தை இன்று நிரூபிக்கத் தவறிவிட்டார்.

கூட்டரசு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், டிஏபியின் அந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரிடம் இருப்பதாகக் கூறப்படும் ஆதாரம் குறித்து விசாரணை செய்வதற்கு ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று முற்பட்ட போது, அவரால் அந்த ஆதாரத்தைக் காட்ட முடியவில்லை.

இப்புகாரைத் தந்த சம்பந்தப்பட்ட இந்தோனேசியப் பெண், தாம் தாயகத்தற்கு திரும்ப வேண்டும் என்ற நோக்கில் பொய்யான போலீஸ் புகாரைத் தந்ததாக போல் யோங் புதிய ஆதாரத்தைச் சமர்ப்பித்தார்.

எனினும் இதுவொரு வாய்மொழி சாட்சியமே தவிர ஆதராப்பூர்வமானது அல்ல என்று உயர் நீதிமன்ற நீதிபதி முடிவு செய்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்