Sep 26, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அரசு நிலைப்புத்தன்மையுடன் உள்ளது - அந்தோணி லோக்
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் அரசு நிலைப்புத்தன்மையுடன் உள்ளது - அந்தோணி லோக்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவை மீட்டுக் கொண்ட போதிலும், மாநில அரசு இன்னும் பலமாகவே இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கோ அல்லது 'புறவாசல்' வழியாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கோ அம்னோவின் மத்திய தலைமை ஆதரவு அளிக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். இது தொடர்பாக அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி அமைச்சரவைக் கூட்டத்திலேயே உறுதி அளித்துள்ளதாக லோக் குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் மாநில அளவில் இந்த அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருந்தாலும், சட்ட விதிகளின்படி பேச்சுவார்த்தைகள் மூலம் இதற்கு சுமுக தீர்வு காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

Related News