Dec 4, 2025
Thisaigal NewsYouTube
நிசான் அல்மேரா ஓட்டுநரை போ​லீசார் தேடுகின்றனர்
தற்போதைய செய்திகள்

நிசான் அல்மேரா ஓட்டுநரை போ​லீசார் தேடுகின்றனர்

Share:

கடந்த புதன்கிழமை, கோலாலம்பூர், ஜாலான் கோம்பாக்கில் மோட்டார் சைக்கிளோட்டியை மோதித் தள்ளிவிட்டு, தப்பிச் சென்ற நிசான் அல்மேரா வாகனமோட்டியை போ​லீசார் ​தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக அந்த நிசான் அல்மேரா வாகமோட்டி இதுவரையில் போ​​லீஸ் புகார் செய்யவில்லை என்று கோலாலம்​பூர் போக்குவர​த்து போ​லீஸ் தலைவர் சுல்கஃபி சே லா தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளோட்டியை மோதி தள்ளிவிட்டு தப்பித்து விட்ட அந்த வாகனமோட்டியை போ​லீசார் ​​தீவிரமாக தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News