Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தாய்லாந்தும் - கம்போடியாவும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

தாய்லாந்தும் - கம்போடியாவும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

Share:

ஜித்ரா, ஜூலை.25-

தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையில் போர் நிறுத்தம் மற்றும் தத்தம் எல்லைப் பகுதிகளிலிலிருந்து இராணுப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்றிரவு அறிவித்தார்.

தாய்லாந்தின் இடைக்கால பிரதமர் பூம்தாம் வேசாயாசா மற்றும் கம்போடியா பிரதமர் ஹுன் மானேட் ஆகியோருடன் நேற்று மாலை தொலைபேசியில் தாம் உரையாடியப் பின்னர் அவ்விருத் தலைவர்களும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டனர் என்று ஆசியான் கூட்டமைப்பின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

தமது அழைப்பை ஏற்று, போர் நிறுத்ததிற்கு உடன்பட்ட அவ்விரு அண்டை நாடுகளில் தலைவர்களுக்கும் தாம், நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

தாய்லாந்து - கம்போடியா நாடுகளிடையே எல்லை பிரச்சினையால் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 டை எட்டிய நிலையில் நேற்று இரு நாடுகளின் எல்லைப் பகுதியிலும் கடும் பதற்றம் நிலவியது. நேற்று மாலை வரை கம்போடியா ஆயதப் படைக்கும், தாய்லாந்து இராணுவப் படைக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

இரு நாடுகளின் எல்லையில் வீற்றியிருக்கும் இரண்டு பழங்கால கோயில்கள் இருக்கும் பகுதியில் இந்தச் சண்டை நிகழ்ந்தது.

Related News