Jul 30, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றத்தை நெருங்குவதை தடுத்தனர்
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்தை நெருங்குவதை தடுத்தனர்

Share:

கோலாலம்பூர், ஜூலை 15-

கடந்த 2009-ஆம் ஆண்டு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM காவலில் இருந்தபோது, இறந்துபோன அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹாக் மரணம் தொடர்பில் நீதிக்கேட்டு, மனித உரிமைப் போராட்டவாதிகள் இன்று காலையில் நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி அணிவகுத்து சென்றனர்.

எனினும் நாடாளுமன்றக் கட்டடத்தின் வேலியிலிருந்து 100 மீட்டருக்கு முன்னதாகவே அந்த மனித உரிமைப் போராட்டவாதிகளை போலீசாரும், ரேலா படையினரும் மனித சங்கியிலியின் மூலம் தடுத்து நிறுத்தினர்.

15 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்த தியோ பெங் ஹாக் மரணம் தொடர்பில் நீதிக் கேட்டு, அவர்கள் மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க முற்பட்டனர்.

எனினும் மகஜர் சமர்ப்பிப்பதாக இருந்தாலும் நாடாளுமன்ற நிர்வாகத்தின் முன்அனுமதி பெற வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

SPRM- மின் முக்கிய சாட்சியான தியோ பெங் ஹாக் , அந்த ஆணையத்தின் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கடந்த 2011 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையத்தின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Related News

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்