சிரம்பான், ஜனவரி.08-
நெகிரி செம்பிலான் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 77 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் கென்னித் டான் ஐ கியாங், கூறுகையில் சிரம்பான் நீலாய் பகுதிகளைச் சுற்றியுள்ள 13 இடங்களில் காலை 9 மணி முதல் அதிகாலை 1 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையில் 395 வெளிநாட்டவர்கள் சோதனை செய்யப்பட்டனர். அதன் விளைவாக, 19 முதல் 47 வயதுக்குட்பட்ட 77 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் பல்வேறு குடிநுழைவு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 71 பேர் ஆண்களும், ஆறு பேர் பெண்களும் ஆவர் என்றார்.








