புத்ராஜெயா, ஜூலை.25-
பெண் தொழில் அதிபர் பல்வீர் கவுர் கடத்திச் செல்லப்பட்டுக் கொலைச் செய்த குற்றத்திற்காக ஒரு முன்னாள் குமாஸ்தா உட்பட மூவருக்கு விதிக்கப்பட்டிருந்த 35 ஆண்டு கால சிறைத் தண்டனையை கூட்டரசு நீதின்றம் நேற்று நிலை நிறுத்தியது.
ஒரு முன்னாள் குமாஸ்தாவான 33 வயது A. மலர்விழி, முன்னாள் உதவியாளர்களான J. சுனில் சிங், மற்றும் 31 வயது C. கவின் முகிலன் ஆகியோர், தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையைக் குறைக்கக் கோரி, செய்து கொண்ட மேல்முறையீட்டை இடைக்கால தலைமை நீதிபதி ஹஸ்னா ஹாஷிம் தலைமையிலான மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவினர் தள்ளுபடி செய்தனர்.
35 வயது வர்த்தகப் பெண்மணியான பல்வீர் கவுரை கடத்திச் சென்று, அவரின் குடும்பத்தை மிரட்டி, பிணைப் பணம் கோரியதுடன், கடைசியில் அவரைக் கொலை செய்து , உடலைப் பினாங்கு இரண்டாவது பாலத்தில் கடலில் தூக்கி எறிந்ததாக மூவரும் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.
கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சன்வே பிரமிட் அருகே ஒரு கட்டுமானப் பகுதியில் அந்த பெண் தொழில் அதிபரைக் கடத்திச் சென்றுக் கொலை செய்ததாக அந்த மூவரும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.








