Sep 27, 2026
Thisaigal NewsYouTube
கைரி, ஹிஷாமுடின் உட்பட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் அம்னோவில் சேர்க்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

கைரி, ஹிஷாமுடின் உட்பட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் அம்னோவில் சேர்க்கப்பட்டனர்

Share:

அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவரான கைரி, ஹிஷாமுடின் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளையில், அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான ஹிஷாமுடின் ஹுசைன் மீது விதிக்கப்பட்டிருந்த இடைநீக்கம் நீக்கப்பட்டுள்ளது.

இம்முடிவானது கட்சியின் உச்ச மன்ற குழுவால் பரிசீலிக்கப்பட்டு, “ருமா பங்சா” என்ற முயற்சியின் கீழ் எடுக்கப்பட்டதாக அம்னோ பொதுச் செயலாளர் அஸ்ரப் வஜ்டி டூசுக்கி தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2018-ஆம் ஆண்டு அம்னோவை விட்டு விலகி, பெர்சத்து கட்சியில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சரான சையத் ஹமீட் அல்பார் மீண்டும் அம்னோவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனுடன், பல நிலைகளில் இருந்த மொத்தம் 6,252 முன்னாள் உறுப்பினர்களும் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை, கட்சியின் ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்