Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ரிங்கிட்டின் எழுச்சியால் சிங்கப்பூர் வாடிக்கையாளர்களுக்கு நெருக்குதல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரிங்கிட்டின் எழுச்சியால் சிங்கப்பூர் வாடிக்கையாளர்களுக்கு நெருக்குதல்

சிங்கப்பூர், அக்டோபர் 05-

சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்திருப்பதால், ஜோகூர் பாருவுக்குச் சென்று செலவிடுவது பற்றி சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் மறுபரிசீலனை செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகறிது.

ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து, சிங்கப்பூர் பணம் ஒரு வெள்ளிக்கு, 3 ரிங்கிட்டுக்கும் கீழ் என்ற நிலையை எட்டுமா என்பது குறித்து ஊகம் எழுந்துள்ளது. கடைசியாக கடந்த 2020 பிப்ரவரியில் இந்த நிலையை ரிங்கிட் எட்டியிருந்தது. அப்போது சிங்கப்பூர் பணம் ஒரு வெள்ளிக்கு, 2.90 ரிங்கிட் என்ற அளவில் அது இருந்தது.

ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவாக இருந்தால், நாட்டின் சுற்றுப்பயணத் துறையையும் பொருளியல் கண்ணோட்டத்தையும் அது பாதிக்குமோ என்ற பேச்சு சிங்கப்பூரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது..

இது ஆரம்பகட்டமே என்பதால், ரிங்கிட்டின் எழுச்சி எவ்வளவு காலத்துக்கு நிலைத்திருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். முன்னோக்கிப் பார்க்கையில், நாணய மாற்று விகிதம் ஏறி இறங்கும் எனப் பெரும்பாலான வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →